திங்கள், 5 ஏப்ரல், 2010

பாஸ்போர்ட் அப்ளை செய்ய போறீங்களா? ஒரு நிமிடம் இதையும் பாருங்களேன்

அடிக்கடி பாஸ்போர்ட் ஆபீஸ் போயி போயி பாஸ்போர்டிற்கு அப்ளை செய்துள்ளதால் ஓரளவிற்கு என்ன என்ன தேவைபடும், தேவைபடாது என்று தெரிந்து விட்டது, நான் போயிருந்த ஒவ்வொரு தடவையிம் சரிவர சான்றிதல் கொண்டுவராததால் நிராகரிக்கபட்டவர்கள் அதிககதிகம்.

நமக்கு தெரிந்தவங்க யாரும் நிராகரிக்க கூடாது, நம்மளுக்கு தெரிந்ததை நாலு பேருக்கு பகிரலாமே என்ற நல்லெண்ணத்திலும்தான் இப்பதிவு.

ஒகே ரெடி ஸ்டார்ட்.

முதலில் ஆன்லைனில் அப்ளை செய்து விடுங்கள்

https://passport.gov.in/pms/Information.jsp

Continue என்பதை கிளிக் செய்தவுடன் Passport Office என்ற பகுதியில் உங்கள் பகுதி உட்பட்ட இடத்தை தேர்ந்து எடுக்கவும்.

அதில் உள்ள அனைத்து விசயங்களையும் கண்டிப்பாக நிரப்பி விடவும்.

District: உங்களது மாவட்டதை தேர்ந்து எடுக்கவும்

Service Desired: என்னவிதமான பாஸ்போர்ட் (புதுசா, ரி இஷ்சுவா)

Surname: உங்களது இன்சியல் (பொதுவா அப்பாவோட பேரு கல்யாணாம் ஆன பெண் கணவனின் பெயர்)

First Name: உங்களது பெயர்

உங்களது பெயரை இதற்கு முன்பு மாற்றி இருந்தால் "if you have ever changed your name click the box and indicate Previous Name(s) in full" என்பதை கிளிக் செய்து

Previous Name : உங்களது முன்பு இருந்த பெயரை எழுதவும்

Sex: ஆணா, பெண்ணா என்று குறிப்பிடவும்

Date of Birth: பிறந்த தேதி நாள் மாதம் வருடம் (DD MM YYYY)

Place of Birth: பிறந்த ஊர்

District or Country: நீங்கள் இந்தியாவில் பிறந்திருந்தால் பிறந்த மாவட்டதையும் வேறு நாட்டில் பிறந்திருந்தால் அந்நாட்டையிம் குறிப்பிடவும்

Qualification: உங்களது படிப்பு

Profession: தொழில்

Visible Mark: உங்களிடம் தெரியும் ஏதாவது மார்க் (மச்சம் போன்றவை)

Height (cms): உயரம்

Present Address: தற்போதைய முகவரி

Permanent Address: நிரந்தர முகவரி

Please give the Date since residing at the Present Address: எவ்வளவு நாட்களாக தற்போதைய முகவரியில் தங்கி உள்ளீர்கள் என்பதை

Phone No: தொலைபேசி எண்

Mobile No : மொபையில் எண்

Email Address: இமெயில் முகவரி

Marital Status: திருமணமான தகவல்

Spouse's Name: கணவர்/மனைவியின் பெயர்

Father's Name: தந்தை பெயர்

Mother's Name: தாயார் பெயர்

தற்போதைய முகவரியில் கடந்த ஒரு வருடமா வசிக்கவில்லை என்றால் "If you are not residing at the Present Address for the last one year, click on this box and furnish addresses of the other place(s) of residence in the last one year along with the duration(s) of living there." என்பதை கிளிக் செய்து கீழ் இருக்கும் From: To: Address 1 : எனும் தகவலை குறிப்பிடவும்

பாஸ்போர்ட் விண்ணப்பத்திற்கு டிடி மூலம் பணம் செலுத்த விருப்ப பட்டால் "If you have a Demand Draft, click on this box and fill the details below" என்பதை கிளிக் செய்து DD No, DD Date, Bank Name தகவலை கொடுக்கவும்

உங்களிடம் ஏற்கனவே பாஸ்போர்ட் இருந்து வருடம் முடிந்து, புதிதாக வேறு அப்ளை செய்ய போகிறீர்கள் என்றால் "If you have held a passport or hold a passport at present, click on this box and fill the details below" என்பதை கிளிக் செய்து

Old/Existing Passport No: பழைய பாஸ்போர்ட் எண்

Issue Date: பழைய பாஸ்போர்ட் கொடுத்த நாள்

Place of Issue: பழைய பாஸ்போர்ட் கொடுக்க பட்ட இடம்

File Number: பழைய பாஸ்போர்ட் பைல் எண் (கடைசி பக்கதில் இருக்கும்)

Date Of Expiry: பழைய பாஸ்போர்ட் முடிவு நாள்

[] கண்டிப்பாக எழுதவும்

[] தேவைப்பட்டால் மட்டும் எழுதவும்

அனைத்தையும் நிரப்பியவுடன், "Save" என்பதை கிளிக் செய்தவுடன் அந்த பாஸ்போர்ட் ஆபிஸின் அடுத்து இருக்கும் (availability date and time) நேரம் தேதியை சொல்லும, உங்களுக்கு தேவையான நாளை தேர்ந்து எடுத்து கொள்ளலாம்.

பிறகு அதை ஒரு இடத்தில் சேவ் செய்து, பிரின்ட் அவுட் எடுத்து கொள்ளவும், போட்டோ ஒட்ட வேண்டிய இடங்களில் போட்டோவை ஒட்டவும். அதில் எதையும் மாற்றம் செய்ய வேண்டாம்.

முகவரி சான்றிதல் (ஏதாவது இரண்டு)

ரேசன் கார்டு

குடிநீர் ரசீது (உங்கள் பெயரில் இருக்க வேண்டும்)

தொலைபேசி ரசீது (உங்கள் பெயரில் இருக்க வேண்டும்)

மின்சார ரசீது (உங்கள் பெயரில் இருக்க வேண்டும்)

கேஸ் கணக்சன் பில் (உங்கள் பெயரில் இருக்க வேண்டும்)

வாக்காளர் அடையாள அட்டை

வங்கி கணக்கு புத்தகம் (கடந்த ஒரு வருடமாக பணம் எடுக்கவும் போடவும் செய்து அதை பதிவு செய்திருக்கவேண்டும்)

துணைவின் பாஸ்போர்ட்

பிறந்த தேதி சான்றிதல் (ஏதாவது ஒன்று)_

1989 பிறகு பிறந்தவர்கள் என்றால் அரசாங்கத்தால் தரும் பர்த் சான்றிதழ்

பள்ளியில் வழங்கப்படும் சான்றிதழ்

கெஜட்டடு (நோட்ரி பப்ளிக்) ஆபிசர் மூலம் வாங்கவேண்டும்

வேறு சான்றிதல்கள்

12வது மேல் படித்திருந்தால் ECR முத்திரை இருக்காது, அதற்காக கடைசியாக எதை படித்து முடித்தீர்களோ அதனை கொண்டுபோகவும்.

உங்களது பெயரை (மதம் மாறும்போது/ எண்கணித முறையில்) மாற்றி இருந்தால் அதற்கு உண்டான சான்றிதழ்.

பழைய பாஸ்போர்ட் எடுக்கும் போது திருமணம் ஆகாமல் இருந்து, பழையது முடிந்து ரினிவல் பாஸ்போர்ட் அப்ளை செய்ய போனாலும் மேற்கன்ட அனைத்தையும் கொண்டு போகவேண்டும், மேலும் திருமண சான்றிதழ் இணைக்க வேண்டும் அல்லது மாவட்ட நீதிமன்றத்தில்/ நோட்ரி பப்ளிக் மூலமாக கணவனும் மனைவியும் சென்று வாங்கவேண்டும். பழைய பாஸ்போர்ட்டை கொண்டு செல்ல வேண்டும்.

அனைத்து சான்றிதழ் ஒரிஜினலையும் மேலும் இரண்டு செட் ஜெராக்ஸையும் கொண்டு செல்லவும். குறைந்தது நான்கு பாஸ்போர்ட் சைஸ் (3.5 x 3.5 CM) தேவைப்படும். நீங்கள் அப்ளை செய்யும் போது வரும் நாளையும் நேரத்தை நன்கு குறித்து கொண்டு, அன்றைய நாளில் காலையிலே பாஸ்போர் ஆபிஸ் சென்று விடுங்கள், அவர்கள் கொடுக்கும் நேரம் என்பது சும்மா... நாள் மட்டும்தான் உண்மை, முன்பாக சென்றாலே சீக்கிரம் வேலை முடியும்... கால் கடுக்க நிற்க வேண்டும், ஆதலால் நன்றாய் சாப்பிட்டுவிட்டு, தண்ணீரை எடுத்து செல்லவும்.

நன்றி :  Mãstän

ஞாயிறு, 4 ஏப்ரல், 2010

யூத்ஃபுல் விகடனுக்கு படைப்புகளை அனுப்ப...

  • யூத்ஃபுல் விகடன் தளத்துக்கு படைப்புகளை youthful@vikatan.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Wordpad அல்லது Notepad மூலம் இணைத்து அனுப்பலாம்.

  • புதிய படைப்புகளுக்கே முக்கியத்துவமும் முன்னுரிமையும் அளிக்கப்படும். அனுப்பப்படும் படைப்புகள் இதுவரை இணையத்தில் வெளியாகாமல் இருக்க வேண்டும் என்பதை கவனத்தில் கொள்க.

  • இளைய சமுதாயத்துக்கு பயன் தரக்கூடிய படைப்புகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு www.vikatan.com முகப்பு பக்கத்தில் இணைக்கப்படும்.

  • படைப்பாளிகள் தங்களது படைப்புகளுடன் புகைப்படத்தையும் இணைத்து அனுப்பலாம். (ஒருமுறை மட்டும் அனுப்பினால் போதுமானது)

  • இளம் படைப்பாளிகள் மட்டுமின்றி, இளைய சமுதயாத்துக்காக எந்த வயதினரும் படைப்புகளையும் கட்டுரைகளையும் எழுதி அனுப்பலாம்.

  • படைப்புகளை அனுப்புவோர் தங்களது பெயர், வயது, கல்வி, முகவரி, செல்பேசி எண்கள் முதலியன அடங்கிய சிறு சுய விவர குறிப்பை இணைக்க வேண்டியது அவசியம். (ஒரு முறை மட்டுமே அனுப்பினால் போதுமானது)

  • புகைப்பட தொகுப்புகளை வெளியிட விரும்புவோர் மின்னஞ்சலில் இணைத்தோ அல்லது அஞ்சல் மூலமோ அனுப்பலாம்.

  • குறும்படம், ஆவணப்படம், அனிமேஷன் ஆக்கங்களை சி.டி அல்லது டி.வி.டி. வடிவில் "யூத்ஃபுல் விகடன், விகடன் டாட் காம், 757, அண்ணா சாலை, சென்னை - 600002" என்ற அஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கலாம்.

  • யூத்ஃபுல் விகடனில் வெளியாகும் படைப்புகளின் உரிமை முழுதும் அந்தந்த படைப்பாளிகளுக்கே உரியது.

  • படைப்பு வெளியானவுடன், அதுபற்றி விவரம் மின்னஞ்சல் மூலம் ஓரிரு நாட்களுக்குள் தெரிவிக்கப்படும்.

நன்றி : யூத்ஃபுல் விகடன்

தேவதைக்கு சரியான ஆண்பால் என்ன?

”எந்த ஒரு குத்துசண்டைவீரனின் வாழ்க்கையோடு ஒப்பிட்டாலும் ஜேம்ஸ் ப்ரடோக்கை போல ஒரு மனிதனை பார்க்கமுடியாது” என்கிற எழுத்தாளர் டேமன் ருன்யெனின் வார்த்தைகளோடு தொடங்குகிறது, படம்.
1928 குத்துசண்டை போட்டியில் ஒரு தலைசிறந்த வீரனாக, தொடர்ந்து பத்துமுறை நாக்அவுட் முறையில் ஜெயித்த, இப்படி ஒரு தவிர்க்கமுடியாத இடத்தில் இருக்கிறான், ப்ரடோக். ஆனால் அதே குத்துசண்டையினால் கையில் ஏற்பட்ட முறிவின் காரணமாய் போட்டிகளில் கலந்துகொள்ள முடியாத நிலை. தொடர்ந்து நாட்டில் நிலவும் கடுமையான வேலையில்லா திண்டாட்டம், இரண்டும் சேர்த்து அடுத்த ஐந்து வருடங்களில் அவன் வாழ்க்கையை சூனியமாக ஆக்கிப்போகிறது. தொடர்ந்து குத்துசண்டையில் கலந்துகொள்ள அவனுக்கு அழைப்புகள் வந்தாலும் கலந்துகொள்ளமுடியாமல் தவிக்கிறான். ஒருபுறம் குடும்ப சூழ்நிலை மேலும் இறங்கிக்கொண்டே இருக்கிறது. ஒரு கட்டத்தில் தண்ணீருக்கும், மின்சாரத்திற்குமான பாக்கியைக்கூட கட்டமுடியாமல் போகிறது. பால்பாக்கியால் வீட்டிற்கு வரும் பாட்டில்பாலும் தடைபடுகிறது. மூன்று குழந்தைகளுடன், ப்ரடோக்.

அருகிலுள்ள ஒரு தொழிற்சாலையில் பளுதூக்கும் வேலைக்கு போகிறான். ஆனால் அங்கும் ஒரு நாளைக்கு பத்து பேருக்குமேல் வேலைக்கு எடுப்பதில்லை, ஆனால் அங்கு இவனோடு சேர்த்து தினமும் ஐம்பது பேராவது காத்திருக்கிறார்கள், வேலைக்காக. அதிர்ஸ்டம் இருந்தால் வேலை என்கிற நிலை, அன்றும் அவன் பெயர் அழைக்கப்படாததால் வெருத்து வீடு திரும்புகிறான், நாட்டில் வேலையில்லாதவர்களின் எண்ணிக்கை ஒண்ணரை லட்சமாக உயர்ந்தது, என்ற செய்தியுடன் நாளிதழ் தெருவில் கிடக்கிறது. வீட்டிற்குவரும் ப்ரடோக்கிடம் அவனது மகள், ”அண்ணன் திருடிட்டான்” என்கிறாள் உள்ளே ஆட்டிறைச்சி துண்டு மேசையில் இருக்கிறது. அவன் மனைவி மே “நான் எவ்வளவோ கேட்டுட்டேன் ஒண்ணுமே சொல்ல மாட்டேங்கிறான்” என்கிறாள். ப்ரடோக் தன் மகனிடம் அதை எடுத்துகொண்டு என்னோடு வா என்கிறான். அதே கடையில் கொண்டு கொடுத்துவிட்டு கடைக்காரரிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு திரும்புகின்றனர். வழியில் மகன் சொல்கிறான் “ என்னுடைய நண்பனை அவனது மாமா வீட்டிற்கு அனுப்பிவிட்டார்கள்”

“ஏன்”

”அவங்க அப்பா அம்மாவால அவனுக்கு சரியான உண்வுகளை கொடுக்க முடியவில்லை”தன் மகனின் இந்த வார்த்தையில் கல்ங்கிபோகிறான் ப்ரடோக். இருந்தும் மகனிடம் “ ஆம், நீ சொல்வது நிஜம்தான், இங்கும் நிலைமை அப்படித்தான் இருக்கிறது, நம்மை போன்றே இங்கு ஏராளமான மக்கள் சாப்பாட்டுக்கும் கஷ்ட்டப்படும் நிலையில்தான் இருக்கிறார்கள், ஆனால் திருடுவதற்கு இதை காரணமாக்க்கூடாது. என்ன நடந்தாலும், நம்முடையதல்லாத எதையும் நீ எடுக்க்க்கூடாது, புரிகிறதா? எனக்கு சத்தியம் செய்து கொடு” என்கிறான்.

சத்தியமா இனி இப்படி செய்யமாட்டேன், ஜோ.
”அப்பாவும் உனக்கு சத்தியம் செய்கிறேன், என்ன நிலைமை வந்தாலும் உங்களை எங்கும் அனுப்பிவிடமாட்டேன்” ப்ரடோக்.

அன்றிரவு, ஒரு போட்டியில் கலந்துகொண்டால் 75 டாலர் கிடைக்கும் என்பதால் மீண்டும் களமிறங்குகிறான். அவனுடைய மேனேஜராக, ப்ரடோக்கை சண்டைக்கான ஆயத்தங்களைசெய்யும்போது அவனது கை எலும்பின் முறிவு இன்னும் ஆறாமல் இருப்பதை கவனிக்கிறார். ஏன் என்னிடம் இதைப்பற்றி எதுவும் சொல்லவில்லை, இப்படியே எப்படி விளையாடமுடியும்? என்கிறார். ”என்னால் முடியும், நான் சுத்தி கடனை வாங்கி வைத்திருக்கிறேன். என்னால் முடிக்கவேண்டிய கடன் நிறைய இருக்கிறது, நான் அவசியம் ஜெயித்தே ஆகனும்” என்கிறான். ஆனால் சண்டையின்போது அவனது கையில் மேலும் மூன்று முறிவுகள் ஏற்படுகிறது. போட்டி நட்த்துபவர் நீ சரியாக சண்டைபோடாத்தால் பார்வையாலர்களின் அதிருப்தியை பெற்றோம். இனி நீ குத்துசண்டைக்கு லாயக்கில்லை என்று அனுப்பிவிடுகிறார். போட்டியும் தடைபடுகிறது. விரக்தியோடு வீடு திரும்புகிறான். சம்பளமும் இல்லை.

விதி அவனை நாலப்பக்கமும் சுழற்றி அடிக்கிறது. ஒருகட்ட்த்தில் மனைவி குழந்தைகளை தனது தங்கையின் வீட்டிற்கு அனுப்பிவைக்கலாம், நானும் ஏதாவது வேலை செய்கிறேன், இங்கு நிலைமை சரியானது குழந்தைகளை திரும்ப அழைத்த்க்கொள்ளலாம், என்கிறாள். ப்ரடோக் என் கை உடைந்திருக்கிறது, ஆனால் மனது அப்படியில்லை, நான் ஷுவிற்கு பாலிஷ் போட்டாவது உங்களை காப்பாற்றுவேன், என்கிறான். ஆனால் இப்படி நிலையில் உங்களை வைத்திருப்பதற்குஎன்னை மன்னித்துவிடு, என்று கதறுகிறான்.

ஆனால் நிலைமை மேலும் மோசமாகிக்கொண்டே போகிறது, மின் இணைப்பு துண்டிக்கப்படுகிறது. குழந்தைகள் உடல் நிலை மோசமாகிறது. வேலைதேடி ப்ரடோக் வெளியே சென்றிருக்கும் நேரம், மே குழந்தைகளை அவளின் தங்கை வீட்டில் விட்டு வருகிறாள். வீட்டிற்கு வரும் ப்ரடோக் குழந்தைகள் இல்லாதது கண்டு மனமுடைகிறான், நான் எந்த சூழ்நிலையிலும் குழந்தைகளை எங்கும் அனுப்ப மாட்டேன் என்று சத்தியம் செய்து கொடுத்திருக்கிறேன். என்னால் என் குழந்தைகளை காப்பாற்றமுடியும் என்று கத்திவிட்டு வெளியேறுகிறான்
 
மேலும் படிக்க..!

நன்றி : முரளிகுமார் பத்மநாபன்

காலக் கல்வெட்டில் கருணாநிதியின் துரோகம் எந்நாளும் அழியாது! - வைகோ கண்டனம்!


தமிழர்களின் வரலாற்றில், நாம் வாழும் காலத்தில் ஏற்பட்டதைப் போன்ற அழிவும், இழிவும் எந்தக் காலத்திலும் ஏற்பட்டது இல்லை. இயற்கைச் சீற்றத்தால், கடல் பொங்கி அழித்தது, ஆனால், இன்னொரு நாட்டுக்காரன் அல்லது இன்னொரு இனத்துக்காரன் தமிழர்கள்மீது படையெடுத்து வென்றதாகவோ, அழித்ததாகவோ நேற்று வரையிலும் வரலாறு இல்லை. இமயம் வரை சென்றான் சோழ மன்னன். அங்கே புலிக்கொடியை உயர்த்தினான். கரிகாலன் சிங்களவர்களைக் கைது செய்து கொண்டு வந்து, கல்லணையைக் கட்டினான்.

அந்த சிங்களவன் படைபலத்தைப் பெருக்க, ஆயுதங்கள், ரேடார்களைக் கொடுத்து, விமானங்களில் இருந்து குண்டுகளை வீசுவதற்காக பலாலி விமானதளத்தைப் புதுப்பித்துக் கொடுத்தது இந்திய அரசு. இராணுவத் திட்டங்களை வகுப்பதற்கு இந்தியத் தளபதிகளை அனுப்பி உதவியது இந்திய அரசு. இந்திய இலங்கைக் கடற்படைத்தகவல் பரிமாற்ற ஒப்பந்தங்களைச் செய்து, துப்புக் கொடுத்து, விடுதலைப்புலிகளுக்காக வந்த 14 கப்பல்களைக் கடலில் மூழ்கடித்தது இந்தியா. உலகம் தடை செய்த ஆயுதங்களை சிங்களவனுக்கு வழங்கியதும் இந்திய அரசு. சீனா, பாகிஇதான், இஇரேல்,ரஷ்யா, ஈரான் ஆகிய நாடுகளிடம் சிங்களவன் ஆயுதங்களை வாங்குதவற்கு, ஆயிரம் கோடி வட்டி இல்லாக் கடன் உதவி அளித்தனர். இவ்வளவும், 2004 ஆம் ஆண்டுக்குப் பின்னர், கடந்த ஐந்து ஆண்டுகளாகவே நடைபெற்று வந்தது. இத்தனை உதவிகளோடும், ஈழத்தமிழர்களைக் கொன்று குவித்தான் ராஜபக்சே. இன்றைக்கு மூன்று இலட்சம் தமிழர்கள், முள்வேலி முகாம்களில் அடைபட்டதற்குக் காரணம் இந்திய அரசு.

ஐந்து ஆண்டுகளாக இந்த நடவடிக்கைகளுக்கெல்லாம் உடந்தையாக இருந்தவர் கலைஞர் கருணாநிதி. அவர், கோடானுகோடித் தமிழ் நெஞ்சங்கள் இதயத்தில் வைத்து வணங்குகின்ற, போற்றுகின்ற பிரபாகரன் அவர்களைக் கொச்சைப்படுத்தி, கொடும் பழி துலீற்றி, ஒரு அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார். பிரபாகரன் செய்த தவறுகளால்தான் தமிழர்களுக்குத் துன்பம் நேர்ந்தது என்று எழுதுகிற கலைஞர் கருணாநிதிக்கு, மனச்சாட்சியே கிடையாது. இவருடைய அகராதியில், துரோகிக்குப் பெயர்தான் மாவீரன். இனம், இனத்தோடுதான் சேரும். ஆம்; துரோகம் செய்த மாத்தையாதான், இவருக்கு மாவீரனாகக் காட்சி அளிக்கிறார்.

பிரபாகரனைக் கொல்ல வேண்டும் என்று இந்தியாவின் உளவு நிறுவனம், ரா (சுஹறு) திட்டம் வகுத்துக் கொடுத்து, துரோகி கிருபனை, சிறையில் இருந்து நீதிமன்றத்துக்குப் போகின்ற வழியில் தப்பித்துச் செல்ல ஏற்பாடு செய்தது. அவன் தப்பித்தான் என்று ஒரு பொய்யான கதையை ஜோடித்துவிட்டு, பிரபாகரனைக் கொல்ல அனுப்பி வைத்தார்கள். இவர்கள் எப்படித் தப்பித்து வந்தார்கள் என்பதில் ஐயம் ஏற்பட்டதால், பொட்டு அம்மான் துருவித்துருவி விசாரித்ததால்தான், மாத்தையா, கிருபன் ஆகியோர் வகுத்த சதித்திட்டம் அம்பலமானது.

ஒன்று, அதிரடிப்படையின் ஆயுதங்களோடு தாக்கிக் கொல்வது முதல் திட்டம். அல்லது, அவர் படுத்து உறங்குகின்ற அறையில் சக்தி வாய்ந்த வெடிகுண்டை வைத்து, ரிமோட் மூலம் இயக்கிக் கொல்வது இரண்டாவது திட்டம். அல்லது, அவருக்கு அருகில் இருந்து பேசும்போது, துப்பாக்கியால் சுட்டுக் கொன்று விடுவது என மூன்று வழிகளில் திட்டம் வகுத்து இருந்தார்கள்.

இதைக் கண்டுபிடித்த பொட்டு அம்மான் பிரபாகரனைப் பார்க்க ஓடினார். அப்போது அவர் அருகில் கிருபன் இருந்தான். அவனிடம் துப்பாக்கி இருந்தது. பாய்ந்து சென்ற பொட்டு அம்மான், கிருபனைப் பிடித்து இழுத்துக்கொண்டு வந்தார். சதித்திட்டம் முறியடிக்கப்பட்டது. புலிப்படையினர் நடத்திய விசாரணையின்போது, பிரபாகரனைக் கொலைசெய்ய சதித்திட்டம் வகுத்ததை மாத்தையா ஒப்புக்கொண்டார். மாத்தையா அளித்த ஒப்புதல் வாக்குமூலம், ஒளிப்படமாகப் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

எனவே, உலகின் எந்தப் புரட்சி இயக்கங்களிலும் துரோகத்துக்கு வழங்கப்படுகின்ற தண்டனைதான் மாத்தையாவுக்கு வழங்கப்பட்டது. ஆனால், மாவீரன் மாத்தையாவுக்கு மரண தண்டனை கொடுத்து விட்டார்கள் என்று கலைஞர் கருணாநிதி வருந்துகிறார்.

அது மட்டும் அல்ல, ‘பிரபாகரன் படை அணிகளும், கருணாவின் படை அணிகளும் மோதின’ என்று குறிப்பிட்டு உள்ளார். இதில் இருந்தே, துரோகி கருணாவை இவர் மனதுக்குள் எந்த அளவுக்கு நேசிக்கிறார் என்பது வெளிப்பட்டு விட்டது. மாத்தையா, கருணா போன்ற துரோகிகளுக்கெல்லாம் பாராட்டுப் பத்திரம் வாசித்து, ‘பிரபாகரன் செய்த தவறுகளால்தான் தமிழர்களுக்குக் கேடு நேர்ந்தது’ என்கிறார்.

மேலும் படிக்க..!

நன்றி :  Maheswari Thangavel

உன் குழந்தையை உன்னுடைய நகலாக (Xerox copy) ஆக்க நினைக்காதே. அது நடவாது”


அவசியம் படிக்க வேண்டிய அருமையான, உபயோகமான பதிவு.

சிவாஜியால் ஒரு சிவாஜியை உருவாக்க முடியவில்லை.
நெப்போலியனால் ஒரு நெப்போலியனை உருவாக்க முடியவில்லை
குழந்தை சுடப்படாத ஈரக்களிமண் .
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என்ற பழமொழி குழந்தைகளுக்காக அல்ல. அப்பாக்களுக்கும் அம்மாக்களுக்குமான அறிவுரை இது.

அன்னையும் பிதாவும்.

அப்பாவும் பையனுமாக குற்றாலத்திற்கு சுற்றுலா செல்கிறார்கள். அங்கே பல இடங்களில் “திருடர்கள் ஜாக்கிரதை” “திருடர்கள் ஜாக்கிரதை” என்று எழுதப்பட்டுள்ளது.

இதை வாசித்த அந்த சிறுவன் தந்தையிடம் கேட்கிறான் “திருடர்கள் ஜாக்கிரதை” என்று எழுதியிருந்தால் மட்டும் திருடர்கள் பயந்து விடவா போகிறார்கள். தந்தை பதில் கூறுகிறார். “இந்த எச்சரிக்கை திருடர்களுக்காக அல்ல. திருடர்களிடமிருந்து நம்மை காத்துக்கொள்ள நம்மை போன்ற சுற்றுலா பயணிகளுக்குக் கொடுக்கப்படும் அறிவுரை”. எனவே திருடர்கள் குறித்து மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும்.

இது போலவே அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என்ற பழமொழி குழந்தைகளுக்காக அல்ல.
அப்பாக்களுக்கும் அம்மாக்களுக்குமான அறிவுரை இது. குழந்தைகள் பெற்றோரை தெய்வம் போல பார்க்கிறார்கள். ஒரு வழிகாட்டியாக (Role Model) கவனிக்கிறார்கள்.

ஆகவே நாம் நமக்காக மட்டுமல்ல நமது குழந்தைகளுக்கு முன்னுதாரணமாக இருப்பதற்காக குறையற்ற நல்ல பழக்க வழக்கங்களை, ஒழுங்குகளை கடைப்பிடிப்பவர்களாக இருக்க வேண்டும்

நமது ஒவ்வொரு செயல்களையும் நமது ஒவ்வொரு நடவடிக்கைகளையும் ஒவ்வொரு வார்த்தைகளையும் குழந்தைகள் ஆழ்ந்து கவனித்து பின்பற்றுகிறார்கள்.
நாம் அவர்களுக்கு என்ன சொல்கிறோம் என்ன அறிவுரை கூறுகிறோம் என்பதை அல்ல, என்ன செய்கிறோம் என்பதையே அவர்கள் பார்க்கிறார்கள் பின்பற்றுகிறார்கள்.

“என் வாழ்வே என் செய்தி” என்ற அண்ணல் காந்தி கூறியது போல நமது செயல்களே நம்மையறியாமல் நம்மை அவர்கள் பின்பற்ற காரணமாக அறிவுரையாகிறது. எனவே நமது நடவடிக்கைகள் சரியானதாகவும் ஒழுக்கமானதாகவும், திறமையானதாகவும், வழிகாட்டும்படியாகவும் இருக்க வேண்டும்.

மேலும் படிக்க இங்கே அழுத்தவும்..!

இந்தப் பக்கம் இளையாங்குடி குரலுக்கு சொந்தமானவை...!

நண்பர்கள் ..!